ETV Bharat / entertainment

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வார்த்தையே மகிழ்ச்சியாக உள்ளது - கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு!

author img

By

Published : May 18, 2023, 4:53 PM IST

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலில், படத்தின் தலைப்பு குறித்து பெரு மகிழ்ச்சி அடைந்ததாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வார்த்தையே மகிழ்ச்சியாக உள்ளது - கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வார்த்தையே மகிழ்ச்சியாக உள்ளது - கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு!

சென்னை: சந்திரா ஆர்ட்ஸ் - இ சக்கி துரை தயாரித்து, இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் சிறப்புக் காட்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.எஸ்.ஆர் பிரிவியூ (preview) தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பார்த்தனர்.

பின்னர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மூத்த தலைவர் நல்லகண்ணு,' “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தையை கேட்ட உடனே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.‌ படம் எப்படி இருக்கிறதோ இல்லையோ என்பதை விட, இந்த தலைப்பில் படம் வந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. அதற்குக் காரணம், இந்தியாவில் தமிழுக்கு, சொல்லுக்கு கிடைத்த பெருமை. உலகத்தில் உள்ள பெருமை என்பது யாதும் ஊரே என்பது நம் தமிழ் இலக்கியத்தில், சங்க இலக்கியத்தில் முதல் வரியாக உள்ளது.

ஐக்கிய நாட்டு சபைகளின் முன்னால், யாதும் ஊரே என்ற பெயர்தான் உள்ளது. இது தமிழுக்கு உள்ள பெருமையையும், தமிழ் இலக்கியத்திற்கு உள்ள பெருமையையும் அடையாளம் காட்டப்பட்டு இருப்பதாகவும், அந்த மகிழ்ச்சியில் இந்த பெயரை கேட்டு படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன்.

ஐக்கிய நாடுகளின் சபையில் யாதும் ஊரே என்பதுதான் தலைப்பு. அது தமிழுக்கு கிடைத்த பெருமை; அது அந்த சொல்லுக்கு கிடைத்த பெருமை; அந்தப் பெயரில் ஒரு படம் வந்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. மேலும், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகமும் மாறி உள்ளது. இலங்கையில் உள்ள பிரச்சனைகளை தமிழகத்திலும் பேசுகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை வெளி உலகத்தில் பேசுகிறார்கள். இதனை இசையால் கருத்தால் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் இது. அதை நான் பாராட்டுகிறேன்”என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன், “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒரு சொல் உலகத்தில் எந்த மொழியிலும் தோன்றியது கிடையாது. ஐயா நல்லக்கண்ணு சொன்னதை போல, ஐக்கிய நாடுகள் சபையில் இந்த சொல் மட்டும் தான் பதிக்கப்பட்டுள்ளது, வேறு எந்த சொல்லும் கிடையாது. அதை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் தமிழ் சமூகத்திற்கு புதிய வரவு மட்டும் கிடையாது, ஒரு புதிய வெற்றியை, புதிய சாதனையை உருவாக்கித் தரப் போகிறது” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு திரைப்படத்தின் நூற்றுக்கணக்கான மனித உழைப்புகள் உள்ளது. இந்த படத்தின் மைய பிரச்சனை என்பது அகதிகள். அகதிகள் உலகம் முழுவதும் படும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது” என்று கூறிய அவர், அகதிகள் கடலிலே செத்துப் போவதாகவும், எங்கேயோ ஒரு இடத்தில் பிணமாக கிடப்பதாகவும், சுட்டு தள்ளப்படுவதாகவும் மேலும், மனிதன் என்பதற்கான அர்த்தத்தையே இன்றைய முரண்பட்ட சமூகம் மற்றும் பொருளாதார நெருக்கடியும், நாட்டை விட்டு ஓடக்கூடிய கட்டாயமும் போன்ற இவை அனைத்தும் சேர்த்து மிக மோசமான நெருக்கடியை உண்டாக்கியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், “அந்த நெருக்கடியைப் பற்றிய உணர்வற்ற சமூகம் இங்கே உள்ளது. இது யாருக்காவது தெரியுமா இதைப் பற்றி யாராவது கவலைப்படுகிறோமா என்பதுதான் இந்த படத்தின் மையக் கருவாக உள்ளது. பொதுஜன வாக்கெடுப்பு மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வை உண்டு செய்யும். தாங்கள் எப்படி வாழ வேண்டும். இப்படி வாழக் கூடாது என்பதை முடிவு செய்வது அவர்கள்தான். அதை முடிவு செய்வது இலங்கை அரசாங்கமோ வேறு எவரும் கிடையாது. அப்படிப்பட்ட இயக்கத்திற்கு இந்த படம் துணையாக நிற்கிறது வலிமை சேர்க்கிறது” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பிரதோஷம் - அரோகரா முழக்கம் எழுப்பி நந்தியை வணங்கிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.