’ஆயிரத்தில் ஒருவன் - 2’ திரைப்படம் வெளிவரும் முன்னரே ’புதுப்பேட்டை - 2’ தயாராகும் என இயக்குநர் செல்வராகவன் சென்னையில் நடந்த ஓர் புத்தக விழாவில் தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் செல்வராகவன் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ’ஆயிரத்தில் ஒருவன் - 2’ விரைவில் வரும் என்றும்; முதலில் ’புதுப்பேட்டை - 2’ தான் வரும் அதன் பின்னரே ’ஆயிரத்தில் ஒருவன் - 2’ வரும் என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளார். இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவன் நடிக்கும் ’நானே வருவேன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது.
மேலும், ’ஆயிரத்தில் ஒருவன் - 2’-விற்கான அறிவிப்பும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: AKவின் மோட்டார் சைக்கிள் டைரீஸ் - வைரலாகும் புகைப்படம்