ETV Bharat / entertainment

'பேட்டைக்காளி – இது படமல்ல; வாழ்வியல்': சீமான் பேச்சு - சீமான் பேச்சு

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இணையத் தொடரான ’பேட்டைக்காளி’ தொடரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.

’பேட்டைக்காளி’ – இது படமல்ல வாழ்வியல்: சீமான் பேச்சு!

author img

By

Published : Dec 14, 2022, 6:57 PM IST

இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள பேட்டைக்காளி இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இதன் சிறப்புத் திரையிடலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, ”இதை ஒரு படமாக கருத முடியாது. பேட்டைக்காளி ஒரு வாழ்வியல். பல்லாயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவுவது தமிழரின் மரபு. பிற்காலத்தில் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக் காலத்தின் போது மாட்டுக்கொம்பில் சல்லியைக் கட்டும் வழக்கம் இருந்ததால், ஜல்லிக்கட்டு என்று பெயர் வந்தது.

பேட்டைக்காளி மிகவும் சிறப்பாக பிரமாண்டமாக எல்லாரும் பார்த்து பாராட்டும் வகையில் உருவாகியிருக்கிறது. இயக்குநர் ல.ராஜ்குமார் மிகவும் சிரமப்பட்டு கடும் உழைப்போடு ஜல்லிக்கட்டு மாடுகளையும் வீரர்களையும் ஒருங்கிணைத்து இப்பேட்டைக்காளியை உருவாக்கியிருக்கிறார்.

திரையில் மாடுகள் குத்தி தூக்கி வீசும் காட்சிகளைப் பார்க்கும்போது வியப்பாக பிரமிப்பாக இருக்கிறது. ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திருப்போம்; ஆனால் திரையில் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. பேட்டைக்காளி ஒரு அருமையான பதிவு.

ஒளிப்பதிவு, பின்னணி இசை மிகவும் பொருந்தி இருக்கிறது. கிஷோர், வேலராமூர்த்தி, கலையரசன், பாலஹாசன் நடிப்பு ரசிக்கும் வகையில் உள்ளது. ஆஹா தமிழ் OTT இதை வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் ல.ராஜ்குமார் மிகவும் சிறப்பாக படைத்திருக்கிறார். பாராட்டுகள்... வாழ்த்துகள்..

கிஷோர் மேய்க்கும் நாட்டு மாடுகள் காட்சிகளை ஒருங்கிணைத்து எடுக்கும் கஷ்டம் எனக்கு நன்றாகவே தெரியும். எல்லோரும் வாழ்ந்து இருக்காங்க. பேட்டைக்காளி மாடு வித்தியாசமாக இருக்கிறது; நன்றாக நடித்தும் இருக்கிறது. இயக்குநருடைய உழைப்பு திரையில் நன்றாகத் தெரிகிறது.

அதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. இயக்குநர் ல.ராஜ்குமாருக்கு உளமாற பாராட்டுகள்.. தம்பி வெற்றிமாறனுக்கும் பாராட்டுக்கள்... எல்லா மக்களும் இந்த பேட்டைக்காளிக்கு கண்டிப்பாக ஆதரவும் பாராட்டும் கொடுப்பாங்க என்று நம்புகிறேன். பேட்டைக்காளியின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இதையும் படிங்க: சிறு பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் - தயாரிப்பாளர் சிவா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.