ETV Bharat / entertainment

மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி! - dhanush

‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி

author img

By

Published : Jan 21, 2023, 11:52 AM IST

சென்னை: சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் 20க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் 'வீரன்' மற்றும் தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய திரைப்படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், நடிகை பிரியங்கா மோகன் மற்றும் பல உச்ச நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படங்களுக்கு மத்தியில் தற்போது வெற்றி கூட்டணியான நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் குமார் ஆகியோர் இணையும் அடுத்த படத்தை தயாரிப்பதாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த கூட்டணி முன்னதாக ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் மூலம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. குறிப்பாக ராட்சசன் திரைப்படம் இந்திய அளவில் ரசிக்கப்பட்டது.

இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையை ஃபேண்டஸி கலந்து சொல்லும் படமாக இருக்கும். இந்த வெற்றிகரமான கூட்டணியில் ஏற்கனவே இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனதால், இந்த படம் ஹாட்ரிக் வெற்றியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் படப்பிடிப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: 'ரெய்டு' நடத்த தயாராகும் விக்ரம் பிரபு - கூடவே நம்ம லதா பாண்டி நடிகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.