ராஜா மற்றும் D.R.சஞ்சய் குமார் சார்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நான் மிருகமாய் மாற. சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘கழுகு’ பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று(நவ-18) திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் இதற்கு முன் தயாரித்த ராஜ வம்சம் என்ற படத்திற்காக வாங்கிய பணத்தை பைனான்ஸியரிடம் கொடுக்காததால் திடீரென அவர் இப்படத்தை வெளியிட தடை கோரினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் படம் எந்தவித பிரச்சினையும் இன்றி வெளியானது.
இதையும் படிங்க:விக்ரம் பட நடிகரிடம் செல்போன் பறிப்பு.!