ETV Bharat / entertainment

சசிகுமார் - சரத்குமார் முதல்முறையாக இணைந்துள்ள 'நா நா' திரைப்படம்! ரிலீஸ் தேதி அறிவிப்பு! - today latest news in tamil

Na Na movie release: சசிகுமார்- சரத்குமார் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'நா நா' திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Na Na movie release
சசிகுமார் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள 'நா நா' டிசம்பர் 15ல் ரிலீஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 4:09 PM IST

சென்னை: கல்பதரு பிக்சர்ஸ் பி.கே.ராம் மோகன் வழங்கும் இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள 'நா நா' (Na Na) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார்.

'அயோத்தி' படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை சசிகுமாரும், 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'போர் தொழில்' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அமோக வெற்றியை சரத்குமாரும் பெற்றுள்ளனர். இருவரும் தற்போது கல்பதரு பிக்சர்ஸ் பி கே.ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் 'நா நா' படத்திற்காக இணைந்து நடித்துள்ளனர்.

'நா நா' திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது

இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் இன்று (டிச. 3) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் தங்கள் சிறந்த நடிப்பைக் கொடுத்து, வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த படத்தை என்வி நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன்-த்ரில்லர் என்டர்டெய்னர்களை விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "குரோதம் குருதியாய்.. ரணங்கள் ரத்தமாய்.." விஷால் - ஹரி கூட்டணியில் விரைவில் ரத்னம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.