ETV Bharat / entertainment

நாக சைதன்யா குறித்த வதந்திக்கு என்னை குற்றம் சொல்வீர்களா? - நடிகை சமந்தா பதிலடி! - நடிகை சமந்தா பதிலடி

ஒரு பெண்ணைப் பற்றி வதந்திகள் பரவினால் அது உண்மையாக இருக்கலாம் என்று நினைக்கிறவர்கள், அதுவே ஒரு ஆணைப் பற்றி வதந்திகள் பரவினால், அதற்கு ஒரு பெண்தான் காரணம் என குற்றம் சுமத்துகிறார்கள் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Samantha
Samantha
author img

By

Published : Jun 21, 2022, 1:49 PM IST

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக திகழ்ந்த நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த ஆண்டு திருமண உறவை முறித்துக் கொண்டனர். அப்போது நடிகை சமந்தா மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

சமந்தா தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், விவாகரத்து நடந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்து விட்டதாக இணையத்தில் செய்திகள் கசிந்தன. நாக சைதன்யா சோபிதா என்ற நடிகையுடன் கடந்த சில வாரங்களாக டேட்டிங்கில் இருப்பதாகவும், படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

நடிகை சமந்தா ட்விட்டர் பதிவு
நடிகை சமந்தா ட்விட்டர் பதிவு

இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இவை அனைத்தும் நடிகை சமந்தா கிளப்பிவிட்ட வதந்திகள் என நாக சைதன்யாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு எதிராக சமந்தாவின் ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர். இதனிடையே நாக சைதன்யா குறித்து தான் வதந்திகளை பரப்புவதாக இணையத்தில் வெளியான செய்திக்கு சமந்தா பதிலளித்துள்ளார்.

சமந்தா தனது டிவிட்டர் பதிவில், ”ஒரு பெண் குறித்து வதந்திகள் பரவினால், அது உண்மையாக இருக்கும் என்கிறார்கள்- அதுவே ஒரு ஆணைப் பற்றி வதந்திகள் பரவினால், அதற்கு ஒரு பெண் தான் காரணம் என்று கூறுகிறார்கள். பிரச்சினையில் சம்மந்தப்பட்டவர்களே அதனை கடந்துவிட்டார்கள், நீங்களும் இதுபோன்ற பேச்சுகளை விட்டுவிட்டு கடந்து செல்லுங்கள், உங்களது வேலையிலும், உங்களது குடும்பத்திலும் கவனம் செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நுஷ்ரத் பருச்சாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.