சினிமா துறை பிரபலங்கள் ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடிய இந்த பாடலை ராக்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.
இது குறித்து தேவி ஸ்ரீ பிரதாத் கூறுகையில், இந்த வாய்ப்பை தான் பெரிய பாக்கியமாகவும், பெருமையாகவும் உணர்வதாகவும், இப்பாடல் தனது மனதிற்கு நெருக்கமானதாக அமைந்துள்ளது என்றார்.
தனது இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும் என்றும் உலகெங்கிலும் தான் நடத்தும் அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய இந்தியக் கொடியுடன் மேடையில் தோன்றி தேசபக்தி பாடல் ஒன்றை பாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாரதத்தின் மீது அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு தற்போது தனக்கு கிடைத்துள்ளதாகவும்; மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மூவர்ணத்தில் ஜொலிக்கும் வேலூர் கோட்டை...!