ETV Bharat / entertainment

ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் 'டாக்சிக்' - அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு! - Toxic A Fairy Tale for Grown Ups

Yash Next Movie Titled Toxic: கோஜிஎஃப் படத்திற்கு பிறகு ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வரும் நிலையில், இப்படத்திற்கு டாக்சிக் (Toxic) என தலைப்பிடப்பட்டுள்ளது.

Rocking Star Yash's Toxic Movie
ராக்கிங் ஸ்டார் யாஷின் டாக்சிக் திரைப்படம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 7:58 PM IST

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ் 19 படத்திற்கு டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (Toxic - A Fairy Tale for Grown-Ups) என தலைப்பிடப்பட்டு உள்ளது.

கேஜிஎஃப் (KGF) படத்தின்‌ மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக மாறியவர்‌ தான் யாஷ்.‌ அப்படத்தின்‌ பிரமாண்ட வெற்றி இவரை உச்ச நிலைக்கு உயர்த்தியது.‌ அதனைத் தொடர்ந்து, இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேஜிஎஃப் படத்திற்கு பிறகு ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ், தனது அடுத்த படத்தின் தலைப்பை தற்போது அறிவித்துள்ளார். இதற்கு டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை குவித்து வரும் இப்படத்தை சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார்.

இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நடிகர் ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகும் இப்படம், ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் வகையில் பொறுமையுடன் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு உயிரளிக்கும் நட்டத்திரங்களை தேர்வு செய்வது தொடங்கி, அனைத்து பணிகளும் முழு ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் படக்குழு பகிர்ந்து கொண்டது, அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில், “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” என்ற தலைப்பை வெளிப்படுத்தும் வீடியோ, பார்வையாளர்களை ஆச்சரியம் அடைய‌‌ வைத்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பட்டத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்து, பெரும் இன்ப அதிர்சியை படக்குழு வழங்கியுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் K நாராயணா கூறுகையில், “எங்களின் மிகப்பெருமையான படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யாஷ் மற்றும் கீது இருவரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஆக்சனுடன் ஒரு மிகச்சிறந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், இப்படத்தை அறிவிக்க சிறிது காலதாமதம் ஆனது.

நாங்கள் தயாரிக்கும் இந்த அற்புதமான மற்றும் பிரம்மாண்டமான படத்தை உலகத்திற்கு காட்டுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, படத்தைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கீது மோகன்தாஸ், ”எனது கதை சொல்லல் பாணியில் நான் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

எனது முந்தைய படங்களான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகியவை சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எனது நாட்டில் உள்ள எனது சொந்த பார்வையாளர்களை திருப்திபடுத்தி வெற்றிப்படம் தர ஆசைப்பட்டேன். அந்த வகையில் தான் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும்.

இந்த படத்திற்காக யாஷுடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யாஷ். அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். மேலும், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: இந்த வாரம் ஓடிடி ரிலீஸில் வரிசை கட்டும் தீபாவளி திரைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.