ETV Bharat / entertainment

என்னுடைய கதையை ரசித்துக்கேட்டார் நடிகர் விஜய் - ஆர்.ஜே.பாலாஜி! - latest tamil news

விஜய்யிடம் கதை சொல்ல சென்றபோது நன்றாக சிரித்துவிட்டு, நன்றாகவே இருக்கிறது, எனக் கூறியதாக நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி
author img

By

Published : Feb 1, 2023, 3:28 PM IST

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ரன் பேபி ரன் திரைப்படம் வருகிற 3ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் குறித்து ஆர்ஜே பாலாஜி கூறும்போது, 'நான் 'எல்.கே.ஜி' படத்தை ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படி போகலாம் என்று தான் தோன்றியது. எனக்கும் அப்படித்தான் பிடிக்கும்.

ரன் பேபி ரன் திரைப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி

யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. அப்போது தான் 'ரன் பேபி ரன்' பட வாய்ப்பு வந்தது. ஆர்.ஜே.பாலாஜியா? இவர் எப்போதும் நகைச்சுவை படம் தான் எடுப்பார் என்று எண்ணும்படி இருக்கக் கூடாது.

என்னை நாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், ஆர்.ஜே.பாலாஜி படம் என்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் வர வேண்டும். இந்த கதை கேட்கும்போது அது தான் தோன்றியது. ஒரு வருடம் முன்பு, நான் கதை கேட்கும் முன்பே படப்பிடிப்பிற்குச் செல்லும் அளவு அவர்கள் தயாராக இருந்தார்கள்.

இந்தக் கதை கேட்டு பிடித்து சம்மதம் சொன்னதும் படப்பிடிப்பிற்குச் சென்று விட்டோம். அதேபோல், இயக்குநர் என்ன கதை கூறினாரோ? அதை அப்படியே தான் எடுத்திருக்கிறார். இப்படத்தில் எனக்கு ஜோடி உண்டு. ஆனால், அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லை. பாட்டு பாடி, நடனமாடினால் தான் கதாநாயகி என்று அர்த்தம் இல்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனக்கு ஜோடியாக ஈஷா தல்வார் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிவா நடிப்பில் வெளியான தில்லுமுல்லு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சினிமாத்தனமான சண்டைக்காட்சிகள் இருக்காது. சராசரி மனிதனிடம் ஒருவன் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடினால், அந்த சராசரி மனிதன் என்ன செய்வானோ? அப்படித்தான் சண்டைக்காட்சிகள் இருக்கும்.

சாமி படத்தில் விக்ரம் சாரை போலீஸாக ஏற்றுக்கொண்டதுபோல் என்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 'வீட்ல விஷேசங்க' படத்தில் நெருக்கமான காட்சி இருக்காது. அந்த காட்சியை திட்டமிடும் போதே நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் எடுத்தோம். ஆனால், 'ரன் பேபி ரன்' படத்தில் கண்ணியமான காதல் காட்சிகள் இருக்கும்.

செங்கல்பட்டு, செஞ்சி, மதுராந்தகம், வாலாஜா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடித்தினோம். ஒரே அறையில் நடக்கும் திரில்லராக இல்லாமல், பல இடங்களில் நடிக்கும் விதமாக இருக்கும். படத்தின் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு வரை யார் குற்றவாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

நான் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. என்னுடைய ஆர்.ஜே. பணியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாவிற்கு வந்தது ஆசீர்வாதத்தினால் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் தான் அறிமுகமானேன். அதற்கு பிறகு என்னுடைய இந்த வளர்ச்சியை ஆசீர்வாதமாக தான் கருதுகிறேன்.

கடந்த வருடம் ஜனவரி 27ஆம் தேதி நடிகர் விஜய் கதை கேட்க அழைத்தார். 40 நிமிடங்கள் ஆனது. நன்றாக சிரித்துவிட்டு, உறுதியாகவும், நன்றாகவும் இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாமா? என்று கேட்டார். 'வீட்ல விஷேசங்க' படத்திற்கே 5 மாதங்கள் ஆனது. உங்களை இயக்க தயாராவதற்கு குறைந்தது ஒரு வருட காலமாவது வேண்டும் என்றேன். அவரும் சரி என்றார்.

இதற்கிடையில் அவருக்கு ஏற்ற வகையில் வேறு ஏதேனும் கதை தோன்றினாலும் கூறுவேன். ஆனால், அவருக்கு கூறிய கதை அவருக்கு மட்டும் தான். வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன். இந்த வருடத்தில் எனது நடிப்பில் 3 படங்கள் வெளியாகும். ’ரன் பேபி ரன்’ படத்திற்குப்பிறகு 'சிங்கப்பூர் சலூன்', இன்னொரு படம் இனிமேல் தான் படப்பிடிப்பு ஆரம்பமாகும்” என்றார்.

இதையும் படிங்க: 'அயலி' மூலம் சொல்ல வந்தது என்ன? - இயக்குனர் முத்துக்குமார் சிறப்பு நேர்காணல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.