Real Winner Thunivu Movie:சென்னை: இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், துணிவு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இப்படம் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் நன்றாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். வங்கிகளின் மோசடி குறித்தும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்தும் இயக்குநர் எச்.வினோத் சிறப்பாக சொல்லியுள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
இப்படத்துடன் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்த இருபடங்களில் யார் பொங்கல் வின்னர் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இரண்டு படங்களும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’துணிவு தி ரியல் வின்னர்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியரும் இதனைப் பகிர்ந்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.