ETV Bharat / entertainment

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 'REBEL' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - ஸ்டுடியோ கிரீன்

REBEL Movie First Look Poster Released: அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்.இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 'REBEL' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

REBEL Movie
REBEL Movie
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 12:30 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர், ஜி.வி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் தற்போது ஏராளமான படங்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில், ஜி.வி பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'REBEL' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதனை சிம்பு தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்.இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகுகிறது, 'REBEL' படம். ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இந்த படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இதில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களான எடிட்டர் வெற்றி கிருஷ்ணன், ஆர்ட் டைரக்டர் உதயா, சண்டை பயிற்சியாளர் சக்தி சரவணன் ஆகியோர் படத்தில் இணைந்து உள்ளனர். உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கலந்த படமாக இப்படம் உருவாகுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதையின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் குமாரின் தோற்றம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''1980களில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியைக் களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.

இதையும் படிங்க: காதலுக்கு தலையசைத்த அமலா பால்.. வைரலாகும் 'லிப் லாக்' வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.