ETV Bharat / entertainment

இணையத்தில் பரவும் ஆபாச வீடியோ.. நடிகை ராஷ்மிகா மந்தனா கூறுவது என்ன? - Electronics Technology Minister Chandrasekhar

Rashmika Mandanna Deepfake Video: பள்ளி அல்லது கல்லூரி காலகட்டத்தில் இது போன்ற மார்பிங் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தால் அதை எவ்வாறு எதிர் கொண்டு இருப்பேன் எனத் தெரியவில்லை என மார்பிங் செய்யப்பட்ட வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது X பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

rashmika-mandanna-reaction-on-ai-generated-fake-deep-video
மார்பிங் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கூறுவது என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 8:26 PM IST

டெல்லி: கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால், இந்த வீடியோ வேறு ஒரு மாடலின் வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மார்பிங் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள வீடியோவாகும். தற்போது இது போன்ற பல நடிகைகள் மட்டும் அல்லாமல் பல பெண்களின் முகங்களையும் Deep Fake மற்றும் AI போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.

  • I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.

    Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…

    — Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் தனது மார்பிங் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது X பக்கத்தில்,

  • சமூக வலைத்தளங்களில் பரவி வரும் Deep Fake வீடியோ குறித்துப் பேச மிகவும் வேதனைப்படுவதாகவும், இந்த சம்பவம் எனக்கு மட்டும் அல்ல அனைவரையும் பயப்பட வைக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • தற்போது ஒரு பெண்ணாகவும் ஒரு நடிகையாகவும் இருந்து வரும் எனக்கு எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் பாதுகாப்பான அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஆனால், இந்த வீடியோ பதிவு எனது பள்ளி அல்லது கல்லூரி காலகட்டத்தில் வெளியிடப்பட்டு இருந்தால் அதை எவ்வாறு எதிர் கொண்டு இருப்பேன் எனத் தெரியவில்லை.
  • இது போன்ற அடையாளம் திருட்டு காரணமாக நம்மில் பலர் பாதிப்பு அடைவதற்கு முன்பு அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த பதிவில், சைபராபாத் போலீஸ், சைபர் கிரைம் மற்றும் மகாராஷ்டிரா சைபர் துறை ஆகியவற்றை டாக் (tag) செய்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு குறித்து மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது X பக்கத்தில், "தற்போது நரேந்திர மோடி அரசு அனைத்து சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்க அனைத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

  • PM @narendramodi ji's Govt is committed to ensuring Safety and Trust of all DigitalNagriks using Internet

    Under the IT rules notified in April, 2023 - it is a legal obligation for platforms to

    ➡️ensure no misinformation is posted by any user AND

    ➡️ensure that when reported by… https://t.co/IlLlKEOjtd

    — Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் - அனைத்து சமூக வலைத்தளங்களின் சட்ட பூர்வ கடமைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன் படி,

  • எந்தவொரு பயனராலும் தவறான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • பயனாளர்கள் மற்றும் அரசு தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் அந்த பதிவை 36 மணி நேரத்தில் நீக்க வேண்டும்.
  • இந்த விதிகளை சமூக வலைத்தளங்கள் வைத்து இருக்கும் நிறுவனம் செய்யவில்லை என்றால் விதி 7ன் கீழ் ஐபிசி விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
  • தற்போது Deepfake வீடியோக்கள் சமீபத்தில் ஆபத்தானதாகவும் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புகிறது அதனைக் குறிப்பிட்ட வலைத்தளங்கள் முறைாக கையாள வேண்டும்.

என நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ பதிவை டேக் (tag) செய்து பதிவிட்டுள்ளார்.

தமிழில் வெளியான 'லவ் டுடே' திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் Deep Fake தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேலையில் கலக்கும் காவாலா நாயகியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.