ETV Bharat / entertainment

’தென்னிந்திய படங்களில் மசாலா பாடல்கள் மட்டுமே உள்ளது..’ சர்ச்சையை கிளப்பிய ராஷ்மிகா - latest tamil news

தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா பாடல்கள் மட்டுமே உள்ளதாக நடிகை ராஷ்மிகா பாலிவுட் பட விழாவில் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய ராஷ்மிகாவின் பேச்சு
சர்ச்சையை கிளப்பிய ராஷ்மிகாவின் பேச்சு
author img

By

Published : Dec 30, 2022, 11:16 AM IST

கன்னட படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜயுடன் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. முன்னதாக, ராஷ்மிகா பாலிவுட்டில் அமிதாப்பட்சனுடன் நடித்திருந்த ‘குட்பை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ’மிஷன் மஜ்னு’ எனும் பாலிவுட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விழாவில் பேசிய ராஷ்மிகா “நான் வளரும் காலங்களில் ரொமேண்டிக் பாடல்கள் என்றால், அது பாலிவுட் பட பாடல்கள் தான். தென் இந்திய படங்களில் மாஸ் மசாலா, ஐட்டம் பாடல்கள் என டான்ஸ் மோடில் தான் பாடல்கள் வருகின்றன. அந்த வகையில் மிஷன் மஜ்னு படத்தில் அப்படி ஒரு பாலிவுட் ரொமேண்டிக் பாடல் எனக்கு கிடைத்துள்ளது. அதனை நீங்கள் அனைவரும் கேட்க ஆவலாக உள்ளேன்” என பேசியுள்ளார்.

ராஷ்மிகா பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இடத்திற்கு தகுந்தார் போல ராஷ்மிகா மாற்றி மாற்றி பேசுகிறார் என குறிப்பிட்டு இவரது வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்தில் தான் கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ படம் குறித்து அவர் பேசியது சர்ச்சையான நிலையில், மீண்டும் அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: Actor Siddharth: வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்ட முயற்சி: சித்தார்த் கிண்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.