இந்திய அளவில் நேஷனல் க்ரஷ் என பலரால் கருதப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைதளங்களில் பரவும் நெகட்டிவ் ட்ரோல்கள் குறித்து பதில் அளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான பான் இந்தியா படமான புஷ்பாவின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்த பின் அவர் மிகவும் பிரபலமடைந்தார்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்த்தின் ரஞ்சிதமே பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த பாடலின் இசை, முன்பு வெளியான பாடல்களின் இசை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும் ராஷ்மிகா மந்தனாவை கரகாட்டக்காரி எனவும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். ராஷ்மிகாவிற்கு சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களை போட்டு அவரை கமெண்ட் அடித்து வந்தனர். இதற்கெல்லாம் பதில் கூறும் வகையில் அவரது இன்ஸ்டாவில் நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ‘கடந்த சில நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்கள் அல்லது பல ஆண்டுகளாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்து வருகின்றன. நான் அந்த விஷயங்கள் குறித்து பேச வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.
நான் நடிக்கத் தொடங்கியதிலிருந்து அதிகமானோரின் வெறுப்புகளை சந்தித்து இருக்கிறேன். பல நெகட்டிவ் ட்ரோல்கள் என்னை நோக்கி வந்திருக்கின்றன. நான் இந்த துறையை தேர்ந்தெடுத்ததற்கான பிரதிபலனை அனுபவிக்கிறேன். மேலும் நான் அனைவரும் விரும்புவதற்கு அனைவருக்குமான தேநீர் கோப்பை அல்ல என்பதையும் புரிந்து கொள்கிறேன். இவை உங்களுக்கு புரிய வில்லை என்றால் என்மீது உங்கள் வெறுப்பை உமிழுங்கள்.
ரசிகர்களுக்கு பிடித்தமானவற்றை செய்வதற்கு முயற்சி செய்துள்ளேன். இருப்பினும் இது வரை நான் சொல்லாத கருத்துக்களுக்காக இணையத்தில் நான் கேலி செய்யப்படும்போதும் இதயம் உடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்’ எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து எல்லோரும் அனைவரிடமும் அன்பாக இருங்கள். நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ராஷ்மிகாவில் பதில் பல நெட்டிசன்களுக்கும், ட்ரோலர்களுக்கும் தக்க பதிலடியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க:உடல்நிலை குறித்து மனம் திறந்த நடிகை சமந்தா - முழுபேட்டி!