உத்திர பிரதேசம்: இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'ஜெயிலர்'. இத்திரைப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 10 தேதி வெளியாகி இன்று வரை ரசிகர்களால் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியான நாள் அன்று ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் அங்குள்ள பாபாஜி குகையில் வழிபடும் மற்றும், தியானம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. இமயமலையில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த ஆன்மீக பயணமாக வடமாநிலகளில் உள்ள கோயில்களில் வழிபட்டு வருகிறார். இந்நிலையில் பத்ரிநாத், துவாராக போன்ற வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்ற ரஜினி வடமாநில அரசியல்வாதிகளையும் சந்தித்து வருகிறார்.
லக்னோவில் உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்யை சந்திந்த ரஜினி, முதலமைச்சரின் காலை தொட்டு வணங்கிய காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி விவாத பொருளாக மாறியது. மேலும், இன்று (ஆகஸ்ட் 20) அயோத்தியில் உள்ள அனுமன் கோயிலுக்கு தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "அயோத்தியில் வழிபாடு செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீண்ட நாட்களாக அயோத்திக்கு வர வேண்டும் ஆசை நிறைவேறியது" என்றார்.
இதையும் படிங்க: நடிகர் யோகி பாபு மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் - நடந்தது என்ன?
முன்னதாக, உத்திரபிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத்துடன் இணைந்து ரஜினியும் அவரது மனைவி லதாவும் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தனர். ரஜினியின் பல படங்களை பார்த்துள்ளதாகவும், இப்போது பணி காரணமாக பாதி படம் தான் பார்க்க முடிந்தது, பார்தத வரையில் படம் நன்றாக இருக்கிறது உத்திர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் தெரிவித்தார்.
'ஜெயிலர்' படத்தை பற்றி பேசுகையில், ரஜினிகாந்த் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளிவந்த ரஜினியின் படம் பெரிதளவில் வெற்றி அடையாத நிலையில் ஜெயிலர் படம் ரசிகர்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது.தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் வெளியாகி படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, மோகன்லால், சிவ ராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். குறிப்பாக 36 ஆண்டுகளுக்கு முன்பு ‘உத்தர் தக்ஷன்’ படத்தில் ரஜினியுடன் திரையுலகைப் பகிர்ந்து கொண்டார் ஜாக்கி ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளனர்.படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘காவாலா’, ஹுக்கும் ஆகிய பாடல்கள் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பரவி, வைரலாகி ரசிகர்களிடம் படத்தின் மீதா எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இதையும் படிங்க: “கேப்டன் மில்லர்” படம் வெளிவரும் முன்பே மீண்டும் நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணையும் புதிய படத்தின் அப்டேட்