ETV Bharat / entertainment

'ஓரளவு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்' - வெளியானது ஜெயிலர் படத்தின் டிரெய்லர்! - jailer theatre bookings

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் டிரெயிலர் தற்போது வெளியாகி, ட்ரெண்டாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 2, 2023, 6:23 PM IST

Updated : Aug 2, 2023, 7:44 PM IST

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், விநாயகம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் புரொமோஷன் தொடங்கியது முதல் பேசுபொருளாக இருந்து வருகிறது. முதலில் 'காவாலா' என்ற பாடல் வெளியானது.

இப்பாடல் ட்ரெண்டாகி சமூக வலைதளங்களில் தமன்னா ஸ்டைல் நடனத்தை ரீல்ஸ் செய்யாத இளசுகளே இல்லை எனக் கூறலாம். பின்னர் வெளியான ஹுகும் பாடல் ரஜினி, விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் சண்டையை கிளப்பியது. ‘உங்கப்பன் விசில கேட்டவன்’, ‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ உள்ளிட்ட பாடல் வரிகளால் ரசிகர்கள் மோதிக் கொண்டனர். மேலும் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி கழுகையும், பருந்தையும் ஒப்பிட்டு சொன்ன கதை நடிகர் விஜய்யை தாக்கி பேசுவது போல் இருந்தது என விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இந்நிலையில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெயிலர் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த டிரெய்லரில் விண்டேஜ் ரஜினியாக வலம் வருகிறார். ''ஓரளவுக்கு மேல பேச்சே கிடையாது வீச்சு தான்'', ''ரொம்ப தூரம் போய்ட்டே... ஃபுல்லா முடிச்சிட்டு தான் திரும்ப வர முடியும்'' என டிரெய்லரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ரஜினி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

சில நாட்களுக்கு வெளியான ஜெயிலர் பட போஸ்டர்களை வைத்து இது கமல்ஹாசன் நடித்த விக்ரம் படக்கதை போல் உள்ளது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் ஜெயிலர் படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: கொடி பறக்குற காலம்... உலக சாதனைப் படைத்த மாமன்னன்!

Last Updated : Aug 2, 2023, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.