மதுரை: தமிழ் திரைப்பட நடிகர் அஜித்தின் 30 ஆண்டுகால திரையுலக பயணத்தை ஒட்டி, மதுரையில் அவரது ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர். அதில் 30 வருட சினிமா பயணம் வெற்றி தல, AK என்றும், அரசியல் கட்சிகளின் கொடிகளின் வண்ணத்தில் 30 நொடி விரல் அசைவிற்காக காத்திருக்கின்றோம் தல, AK என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், அந்த சுவரொட்டியில் தலைமைச் செயலகம் படம் மற்றும் அஜித் குமார் படங்களுடன் 'மனித கடவுள் அஜித் பக்தர்கள்' என குறிப்பிட்டு மதுரை முழுவதும் ஒட்டி உள்ளனர். இந்த சுவரொட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நண்பனைத் தாக்கி மரணம் ஏற்படுத்தியவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை சிறைத்தண்டனையாக குறைப்பு