ETV Bharat / entertainment

இந்த தலைமுறைக்கும் வாசிக்கும் பழக்கத்தை பொன்னியின் செல்வன் ஏற்படுத்தியுள்ளது - கார்த்தி

பொன்னியின் செல்வன்’ படத்தால் அந்த புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், வாசிப்பு பழக்கமும் அதிகமாகி உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி பேச்சு
கார்த்தி பேச்சு
author img

By

Published : Sep 29, 2022, 8:07 AM IST

சென்னை: தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. அதோடு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தனி அனுபவத்தை தந்தது.

மூன்று ஆண்டு உழைப்பு பொன்னியின் செல்வன் படம். திரைக்கு வருவதற்கு முன்பாக கடைசியாக நம் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டேன் அதற்கான சந்திப்பு நிகழ்வு தான் இது.

மாதம், மாதம் எனக்கு ஒரு படம் வெளியாகிறது. தொடர்ந்து உங்களை சந்திக்கிறேன். அடுத்து தீபாவளிக்கு ’சர்தார்’ வருகிறது. வெளியூர் சென்று பொன்னியின் செல்வன் குறித்து கல்கியின் புகழ் பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. சோழர்கள் பற்றி வெளியூர் மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

’பொன்னியின் செல்வன்’ படத்தால் அந்த புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. வாசிப்பு பழக்கமும் அதிகமாகி உள்ளது. நம் மன்னர்கள் குறித்து காட்சிகள் இந்த படத்தின் வாயிலாக கிடைக்கப்போகிறது. இன்னும் நானும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கவில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படி வாழ்த்திருப்போம் என்பதற்கு Reference கிடையாது இந்த படம் அதற்கு ஒரு Reference ஆக இருக்கும். வாழ்க்கையிலும் என் திரை வாழ்க்கையிலும் மிக முக்கியமான படம் ’பொன்னியின் செல்வன்’” என்றார்.

மேடையில் பேசிய கார்த்தி

“பொன்னியின் செல்வன் வெளியாக உள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஒரு தலைமுறைக்கு மட்டுமே பொன்னியின் செல்வன் தெரியும் என நினைத்திருந்த வேளையில் என் மகள் பொன்னியின் செல்வனை எடுத்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறாள். இப்படி கதை தெரிந்து கொண்டு படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படிப்பதற்கும், கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்குமான ஆர்வம் அதிகரித்துள்ளதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். வெளி மாநிலங்களுக்கு ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்ற பொழுது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெரிந்து கொண்டு கேள்வியை முன் வைத்தனர். மணி சாரின் முதல் வரலாற்று திரைப்படம் இதற்கு முன்பும் பல ஜாம்பவான்கள் வரலாற்று திரைப்படம் எடுத்துள்ளனர்.

மணி சார் ரோஜா,பாம்பே என ஹிந்தியில் படங்கள் செய்துள்ளார் எனவே அவர் மீது அங்கு மரியாதை அதிகமாக உள்ளது. அது மட்டுமின்றி தமிழ் சினிமா மீதும் அவர்களுக்கு மரியாதை உண்டு” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!' - விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.