ETV Bharat / entertainment

சர்க்கரை நோயால் அவதிப்படும் "பிதாமகன்" தயாரிப்பாளர்: உதவி வேண்டி வீடியோ வெளியீடு! - Karunas

நடிகர் விக்ரம், நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை சர்கரை நோயால் பாதிக்கபட்டு உடல்நலம் மிகவும் குன்றிய நிலையில் உள்ளார். அவரது மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்காக உதவி கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

pithamagan movie producer suffering from diabetes sought help to meet his medical expenses
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிதாமகன் பட தயாரிப்பாளர் மருத்துவ செலவுகளை சமாளிக்க உதவி கோரியுள்ளார்
author img

By

Published : Mar 6, 2023, 1:21 PM IST

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிதாமகன் பட தயாரிப்பாளர் மருத்துவ செலவுகளை சமாளிக்க உதவி கோரியுள்ளார்

சென்னை: இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிதாமகன். ” ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி “ சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரது நடிப்பும் பேசப்பட்டது. மேலும் விக்ரம், சூர்யா ஆகியோரின் திரையுலக வரலாற்றில் இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. நடிகர் விக்ரமுக்கு இப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை வி.ஏ.துரை தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை சர்க்கரை வியாதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வி.ஏ.துரை பிதாமகன் மட்டுமின்றி கஜேந்திரா போன்ற பல படங்களை தயாரித்தவர். EVERGREEN MOVIES என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னம்மா கண்ணு, லூட்டி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக சர்க்கரை வியாதி காரணமாக தயாரிப்பாளர் துரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற கூட காசு இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது. சர்க்கரை வியாதி காரணமாக அவரது காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு கடுமையாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மிகவும் மெலிந்து இருப்பதாகவும் அவருக்கு உதவி தேவை எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் பண உதவி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிதாமகன் படத்தில் நடிக்க நடிகர் கருணாஸ் -க்கு தயாரிப்பாளர் துரை ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார்.‌ தற்போது அந்த தொகையை துரையின் மருத்துவ செலவுக்கு கொடுக்கிறேன் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். தயாரிப்பாளர் துரையின் நிலை அறிந்து நடிகர்‌ சூர்யாவும் ரூ.2 லட்சம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் அவரது உடல் மிகவும் நலிந்துள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது என்றும், இதனால் இயன்றவர்கள் முடிந்தவரை உதவ முன்வர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் துரை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சினிமா உலகை பொறுத்த வரையில் மார்க்கெட் உள்ளவரை மட்டுமே அனைவருக்கும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. மார்க்கெட் இழந்து விட்டால் யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற நிலை தற்போது வரை தொடர்கிறது என்பது வேதனையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

சினிமாவை நம்பி பலகாலம் காத்திருந்து சிறு சிறு வேடங்கள் மூலம் வாய்ப்பு பெற்று மக்களுக்கு தெரிந்த முகமான நடிகர்கள் பலர் தங்களது பொருளாதார நிலை காரணமாக தங்களுக்கு முறையான மருத்துவ வசதியை கூட பெற முடியாத நிலை உள்ளது. நடிகர் பொன்னம்பலம், போண்டா மணி என பலரும் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஒருவர் தனது மருத்துவ செலவுகளை சமாளிக்க உதவி கோரியுள்ளார். தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் அவருக்கு முன்வந்து உதவ வேண்டும் என்று தயாரிப்பாளர் துரை சார்பில் அந்த வீடியோவில் பேசியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சமூக நலத்துறை தேவையில்லாததா..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.