ETV Bharat / entertainment

ஓடிடியில் வெற்றிநடை போடும் பேட்டைக்காளி!

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் வெப் சீரிஸான ‘பேட்டைக்காளி’ காளைகளை அடக்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத்திறன் மற்றும் வரலாற்றுப்பிரிவு போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது.

ஒடிடியில் வெற்றிநடை போடும் பேட்டைக்காளி
ஒடிடியில் வெற்றிநடை போடும் பேட்டைக்காளி
author img

By

Published : Nov 22, 2022, 3:47 PM IST

ல.ராஜ்குமார் இயக்கியுள்ள பேட்டைக்காளியில் இணையத்தொடரில் நடிகர்கள் கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி, ஷீலா மற்றும் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். ல. ராஜ்குமார் இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

எட்டு எபிசோடுகளைக் கொண்ட பேட்டைக்காளி கடந்த மாதம் 21ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு எபிசோடாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நான்கு எபிசோடுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை சொல்லப்படாத ஜல்லிக்கட்டு மற்றும் அதனைச்சுற்றி நடக்கும் வீரம், வன்மம், ஏமாற்றம், பகை, துரோகம் உள்ளிட்டவற்றை அங்குள்ள மண்மணத்துடன் சொல்லியுள்ளது பேட்டைக்காளி.

மேலும் வளர்ப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பும் முக்கிய உணர்ச்சிகளாக பேட்டைக்காளியில் இருப்பதால், ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்தான அனுபவத்தை நிச்சயம் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.

இதையும் படிங்க: அஜித்திற்காக துணிவு திரைப்படத்தில் பாடல் எழுதி உள்ளேன் - பாடலாசிரியர் விவேகா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.