ஹைதராபாத்: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் பதான் திரைப்படம் உலகளவில் 11 நாள்களில் ரூ.780 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.400 வசூலை எட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வசூல் விவரங்களை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் மட்டும் ரூ.299 கோடி வசூலித்துள்ளது. பாலிவுட் சினிமா வசூல் வரலாற்றில் புதிய மைல் கல்லை பதான் படம் எட்டியதாக கூறப்படுகிறது. நடிகர் அமீர் கானின் தங்கல் படம் இந்தியாவில் மட்டும் ரூ.382 கோடி வசூலித்திருந்தது. இந்த சாதனையை பதான் 11 நாள்களிலேயே முறியடித்துள்ளது.
அண்மை காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்துவந்தன. கேஜிஎப், ஆர்ஆர்ஆர், காந்தாரா, விக்ரம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்திய அளவில் வெற்றிபெற்றன. இந்த படங்கள் வெளியானபோது பலிவுட் முன்னணி நடிகர்களின் பல படங்கள் வெளியானது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.
-
#Pathaan 🤝 Blockbuster
— Yash Raj Films (@yrf) February 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Have you booked your tickets yet? https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/vxR5tjapAm
">#Pathaan 🤝 Blockbuster
— Yash Raj Films (@yrf) February 5, 2023
Have you booked your tickets yet? https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/vxR5tjapAm#Pathaan 🤝 Blockbuster
— Yash Raj Films (@yrf) February 5, 2023
Have you booked your tickets yet? https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/vxR5tjapAm
சொல்லப்போனால், வட மாநிலங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் பல வெற்றிகரமாக ஓடின. இதனால் பாலிவுட் சினிமா இக்கட்டான சூழ்நிலையில் தவித்துவந்தது. இந்த நிலையில் பதான் படம் பாலிவுட் சினிமாவை மீண்டும் உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த படத்தில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலிவுட்டின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான சல்மான் கானும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது கூடுதல் கவனத்தை ஈர்த்தது. விறுவிறுப்பான சேசிங், ஆக்சன், காதல் காட்சிகள் படத்துக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடுத்தர மக்களின் கதை சொல்லி இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவலைகள்