நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் "ஒத்த செருப்பு". இப்படம் விமர்சன ரீதியாக மிகுந்த பாராட்டை பெற்றது. பார்த்திபனின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளில் ஒன்றாக "ஒத்த செருப்பு" இருந்தது.
இதைத் தொடர்ந்து, அவர் இயக்கியுள்ள "இரவின் நிழல்" திரைப்படம், நான்-லீனியர் (Non linear)சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களுடன் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், "இரவின் நிழல்" படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன.
இதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இயக்குநர் பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார். "இரவின் நிழல்" திரைப்படம் இயக்குநர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நாளை 'பீஸ்ட்' ரிலீஸ்: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!