இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் உலகெங்கும் வெளியாகவுள்ளதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இரஞ்சித் இயக்கும் இந்த 'நட்சத்திரம் நகர்கிறது " படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா, ஹரி, ஷபீர் , வினோத், மைம் கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். வித்தியாசமான கதைக்கருவில் வெவ்வேறு காதல் கதைகளைக் கொண்ட இந்தப் படத்தில் ‘LGBT' சமூகத்தினரைப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் டீஸர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்தப் படத்தினை தயாரிக்க இசையை இசையமைப்பாளர் டென்மா அமைத்துள்ளார்.
![பா.இரஞ்சித்தின் ’நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-paranjith-script-7205221_04082022184729_0408f_1659619049_289.jpg)
இதையும் படிங்க: 'என்னைப் பள்ளியைச்சுற்றி ஓடவிட்டவர் கார்த்தி..!' - யுவன்