ETV Bharat / entertainment

'குடியரசுத்தலைவர் கோயிலில் நுழைந்ததற்காக கோயிலைக் கழுவி விட்ட இந்தியா இது..!' - பா.இரஞ்சித்!

'ஒரு தலித், இந்திய குடியரசுத் தலைவராக ஆக முடியும்; அதே நேரத்தில் சாதியப் பாகுபாடுகளுக்கு உள்ளாகவும் முடியும்' என்று 'சேத்துமான்' பட விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியுள்ளார்.

’ஜனாதிபதி கோயிலில் நுழைந்ததற்கு கோயிலை கழுவி விட்ட இந்தியா இது..!’ - பா.ரஞ்சித்!

author img

By

Published : May 27, 2022, 6:16 PM IST

சென்னை: பா. இரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ’சேத்துமான்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு வடபழனி பிரசாத் லேபில் இன்று(மே 27) நடைபெற்றது. இதில் இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித், இயக்குநர் தமிழ், எழுத்தாளர் பெருமாள்முருகன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் ’நக்கலைட்ஸ்’ பிரசன்னா பேசுகையில், “மாலை 6 மணிக்கு எல்லாம் டீக்கடைகள் மூடப்படும். செல்போன் நெட்வொர்க் கிடையாது. அந்த மாதிரி ஊரில் தான் இருந்தோம். இயக்குநர் மேல் தாங்க முடியாது கோபம் இருந்தது. இதை நம்மால் செய்ய முடியும் என்ற உணர்வை இயக்குநர் தான் வெளியில் கொண்டு வந்தார். உண்மைச்சம்பவத்தை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார். படப்பிடிப்பின்போது உண்மையிலேயே பியர் பாட்டிலால் மண்டையில் அடித்துவிட்டார்” என்றார்.

எழுத்தாளர் பெருமாள்முருகன் பேசுகையில், ”நான் தமிழில் 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். என்னுடைய நாவலை ’பாலு மகேந்திரா’ படமாக எடுப்பதாகச்சொன்னார். ஆனால் எடுக்க முடியவில்லை. பலர் இப்படி படமாக எடுப்பதாகச் சொல்லி, ஆனால் எடுக்க முடியாமல் போகிறது. 2017இல் இயக்குநர் தமிழ், என்னைப் பார்க்க வந்தார். ’வறுகறி’ என்ற கதையைப் படமாக எடுப்பதாகச் சொன்னார். கதை, வசனம் உங்கள் பெயரில் தான் வரும் எனத் தெரிவித்தார்.

3, 4 முறை நாமக்கல் வந்து என்னைச் சந்தித்தார். ஒரு சிறுகதையை 2 மணி நேரப்படமாக எப்படி எடுப்பது என்று உரையாடினோம். குறைந்த உரையாடல் தான் இதில் இருக்கும். தமிழில் இந்த மாதிரி ஒரு சிறுகதையை இவ்வளவு அருமையாக பண்ண முடியும் என்று இயக்குநர் தமிழ் மீது எண்ணம் தோன்றியது” எனப் பேசினார்.

இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில், “சேத்துமான் திரைப்படத்தின் கதையைப் படித்து முடித்தபோது, இது futureஆ என்ற சந்தேகம் இருந்தது. Independent சினிமாவை மீது எனக்கு ஆர்வம் உள்ளது. அதில் உள்ள சுதந்திரம் பிடிக்கும். Literatureஇல் எப்படி சுதந்திரம் உள்ளதோ, அதுபோல சினிமாவில் சுதந்திரம் இருக்கவேண்டும். சுயாதீன திரைப்படங்களைப் பார்த்து, அதன் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் என்னால் எடுக்கமுடியவில்லை.

ஆனால் Documentry விரைவில் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். பெருமாள்முருகனின் ரசிகன் நான். அவரது வாசிப்பு என்னைத்தானாக ஈர்த்தது. ’கூலமாதாரி’ என்ற நாவலில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கையை வாழும் குழந்தைகள் இன்னும் இருக்கின்றனர். ’பண்ணை அடிமைகள்’ இன்னும் உள்ளனர். ஆனால், அதை யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு சுதந்திரமான படம்.

இதில் எந்தவிதமான தலையீடும் இல்லை. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு கோயிலில் நுழைந்து விட்டார் என கோயிலைக்கழுவிவிட்ட இந்தியா இது. இன்று வரை சாதியப்பிரச்னை இங்கு உள்ளது. ஒரு தலித், இந்தியக் குடியரசு தலைவராக ஆக முடியும். அதே நேரத்தில் சாதியப்பாகுபாடுகளுக்கு உள்ளாகவும் முடியும். அதைப் பற்றி இந்தப் படம் பேசியுள்ளது.

'சேத்துமான்' தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக மாறியுள்ளது. சினிமா என்பது பெரிய முதலீட்டில் எடுக்கிற படம் மட்டும் இல்லை. சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படமும் நல்ல வெற்றியைப் பெறுகிறது. இயக்குநர் விரும்பிய கருத்தைச் சுதந்திரமாக எடுக்க முடிகிறது. குறைந்த செலவில் எடுக்கப்படுகிற படங்கள் நல்ல வெற்றிகளைப் பெறுகின்றன. நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

படம் எடுக்கும் இளம் தலைமுறையினர் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சினிமாவில் சரியான பொறுப்பான ஆட்கள் கிடைப்பது கடினம். நல்ல திரைப்படங்களை இந்த சமூகத்திற்கு கொடுக்க வேண்டும். சமூகத்தில் விவாதத்தை உருவாக்க வேண்டும். சரியான மாற்றத்தை உருவாக்க கலைஞர்களை வரவேற்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: 'நடிகர் அவதாரம் எடுத்த பாஜக அண்ணாமலை..!' : ரூ.1 மட்டுமே சம்பளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.