ETV Bharat / entertainment

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை - "குழலி" பட இயக்குனர் கண்ணீர் - குழலி

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என குழலி படத்தின் இயக்குநர் செரா கலையரசன் தெரிவித்துள்ளார்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை - "குழலி" பட இயக்குனர் கண்ணீர்

author img

By

Published : Sep 23, 2022, 5:21 PM IST

செரா கலையரசன் இயக்கத்தில் காக்கா முட்டை விக்னேஷ், ஆரா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் குழலி. முக்குழி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று‌ விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இப்படத்தின் இயக்குநர் செரா கலையரசன் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ”சிறிய படம் பெரிய படம் என்ற வேறுபாடு இல்லை. என்னை பொறுத்த வரை எனக்கு என் படம் தான் பெரிய படம். சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கொடுக்க திரையரங்க உரிமையாளர்கள் மறுக்கின்றனர்” என்று தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை - "குழலி" பட இயக்குனர் கண்ணீர்

மிகவும் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்துவிட்டு அதனை வெளியிட முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “சிறிய படங்களுக்கு பத்திரிகை விமர்சனம் தான் முக்கியம். மூன்று நாட்களுக்குப் பிறகு விமர்சனம் என்பது சிறிய படங்களுக்கு பாதிக்கும்.

இதுவரை 130 திரையரங்குகள் கொடுத்தவர்கள் தற்போது 89 திரையரங்குகள் தான் கொடுக்க முடியும் என்கின்றனர். நீங்கள் தான் நல்ல படங்களுக்கு உதவ வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஷாருக்கான் படத்தில் இணையும் விஜய்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.