ETV Bharat / entertainment

"சாமி கும்பிட்டாலே சங்கி என்று சொல்லிவிடுகிறார்கள்" - நித்யாநந்தாவிடம் விருது வாங்கிய பேரரசு குற்றச்சாட்டு - பேரரசுவிற்கு விருது

இயக்குநரும், பாஜக உறுப்பினருமான பேரரசுக்கு நித்யாநந்தா கைலாசாவில் இருந்தபடி ‘தர்ம ரட்சகர்’ எனும் ஓர் விருதை அளித்துள்ளார்.

இயக்குநர் பேரரசுவிற்கு ‘தர்ம ரட்சகர்’ விருது அளித்த நித்யாநந்தா...!

author img

By

Published : Oct 26, 2022, 9:41 AM IST

திரைப்பட இயக்குநர் பேரரசு பல்வேறு வெற்றிப்படங்களை இயங்கியுள்ளார். சமீப காலமாக இந்துகளுக்கும் பாஜகவிற்கும் குரல் கொடுத்துகிறார். இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்துவாக சித்தரிக்கின்றனர் என்று விமர்சனம் வைத்ததற்கு இயக்குநர் பேரரசு, ”மத நம்பிக்கை இல்லாத நீங்கள் ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறீர்கள்...?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம்(அக்.24) தீபாவளியன்று இயக்குநர் பேரரசுவை கைலாசாவிலிருந்து காணொலி வாயிலாக அழைத்து, அவருக்கு ‘தர்ம ரட்சகர்’ எனும் விருதை நித்யாநந்தா வழங்கினார். தன்னுடைய திரைப்பட டைட்டிலிலேயே ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’, ‘திருப்பதி’, ‘பழனி’ , ‘திருத்தனி’, ‘திருவண்ணாமலை’ என ஆன்மீக ஸ்தலங்களின் பெயர்களை வைத்திருக்கும் பேரரசு தொடர்ந்து இந்து மதம் குறித்து தைரியமாகப் பேசி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக காணொலியில் தெரிவித்தார்.

அதே காணொலியில் பேசிய பேரரசு, “இப்போதெல்லாம் சாமி கும்பிட்டாலே சங்கி என்று சொல்லிவிடுகிறார்கள். இந்து மதத்தை பற்றி பேசினால் மத வெறியர் என்கிறார்கள். இது ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஒரு இயக்குநர் இந்து என வெளிப்படுத்தினாலே ஒரு கும்பல் அதை எதிர்க்கிறது. தற்போதைய காலகட்டத்தில் இந்து மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. ஜே.எஸ்.கே கோபி, மோகன் ஜி, வீரமுருகன் போன்றவர்கள் சினிமாவிலும் துணிச்சலாக இந்து மதத்தைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.

அகத்தியர், ரமண மகட்ரிஷிக்கு பிறகு இந்து மதத்தை காக்க வந்தவர் நித்யாநந்தா. அவரின் வளர்ச்சியை சில பேர் கெடுக்கப் பார்க்கிறார்கள். அவர் இந்தியாவில் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. அவர் விரைவில் இந்தியாவிற்கு வந்து மக்களுக்கு சேவை புரிய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: வருகிறது சர்தார் 2...கன்ஃபார்ம் செய்த படக்குழு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.