இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் அனைவரும் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. காரணம் இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
சுமார் 25 கோடி வரை விக்னேஷ் சிவன் தரப்பு கேட்டதாகவும், ஆனால் அதற்கு நெட்ஃபிலிக்ஸ் தங்களுக்கு இந்த தொகை கட்டுப்படியாகாது என பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான ஜோடி தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலமே வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த நிறுவனம் விலகி விட்டால் என்ன அடுத்த நிறுவனத்திடம் விலை பேசலாம் என்று எண்ணிய போதிலும், ஒரு மாதம் கழித்து புகைப்படங்களை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்துவிடும் என்கிற காரணத்தாலும் இந்த புகைப்படங்களை இவர்களே வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ’விக்ரம்’ படத்தை புகழ்ந்த கேஜிஃப் மற்றும் பிரேமம் பட இயக்குநர்கள்