இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரை உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
திரிஷா ஐஷ்வர்யா ராய், ஜெயராம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஐஷ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் நெல்லை மாநகரில் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து நெல்லையில் விக்ரம் ரசிகர்கள் அவரது பேனருக்கு பாலாபிஷேகம் செய்து, செண்டை மேளம் முழங்க அதிகாலை முதலே ஆட்டம், பாட்டம் என கொண்ணாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் திரையரங்குகள் களைகட்டியுள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களோடு படம் பார்த்த சோழர்கள்...