சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் காதல் திருமணம் செய்த நிலையில், வாடகைத் தாய் முறையில் இரட்டைக்குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகினர்.
சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்கள், மற்றும் குடும்பத்துடன் அவர் மேற்கொள்ளும் வெளியூர் பயணங்கள் போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று(டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடனும் அவரது மகன்களான உயிர், உலகத்துடனும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது மகன்கள் என அனைவரும் சிகப்பு நிறத்தில் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து குடும்பமாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதேபோன்று ஓணம் பண்டிகையையும் நயன்தாரா அவரது மகன்களுடன் கொண்டாடிய நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையும் அவரது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். முன்னதாக நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டு ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சிறந்த 10 படங்கள் ஒரு பார்வை..!