ETV Bharat / entertainment

Nayanthara: திருமண நாளில் உருகிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி - recent kollywood news

என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே என்று தான் எழுதிய பாடலின் வரிகளைக் கொண்டு தன் திருமண நாளில் நயன்தாராவுக்கு மனம் உருகி இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

nayanthara wedding anniversary
நயந்தாரா திருமண நாள்
author img

By

Published : Jun 10, 2023, 8:10 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படுபவர், நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து திரையுலகில் கொடி கட்டி பறப்பவர். ரஜினி தொடங்கி தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி‌ சேர்ந்து நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவருக்கென்று பிரத்யேகமாகத் படங்கள் தயாரிக்கும் அளவுக்கு கதையின் நாயகியாகப் பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சில காலம் லிவிங் ரிலேஷனில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் பங்கேற்று இவர்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்தார். பாலிவுட்‌ சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்பட குறிப்பிட்ட பிரபலங்கள் இத்திருமணத்தில் பங்கேற்றனர்.

ஆனால், திருமணம் ஆன நான்கு மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக இணையத்தில் இந்த ஜோடி அறிவித்தது. இவர்களின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இருவரும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டனர்.

இது சமூகத்தில் பேசுபொருளாக மாறி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. இதுகுறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பு சரியான விளக்கம் கொடுத்த நிலையில், இந்த செய்தியின் பரபரப்பு படிப்படியாகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த தம்பதி தனது குழந்தைகளுக்கு உயிர் - உலக் என்று பெயர் வைத்தனர்.

அதாவது ஒரு குழந்தையின் பெயர் உயிர் ருத்ரோநீல் என் சிவன் என்றும் மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்விக் என் சிவன் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த வித்தியாசமான பெயர்களும் அப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இவை எல்லாவற்றையும் கடந்து இன்று இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

இதைக் கொண்டாடும் விதமாக சமூக வலைதளத்தில் தங்களது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு, அத்துடன் "உங்கள் இருவருக்கும் நேற்றுதான் திருமணம் நடந்தது போன்று உள்ளது. ஆனால், அதற்குள் ஒரு வருடங்கள் கடந்து விட்டது” நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

”நாங்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும். நம் வாழ்வில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆசீர்வாதமே, எங்களைச் சுற்றியுள்ள நல்ல மனிதர்கள் ஆசியும், இறைவனின் அருளும்தான். அவைகளோடு இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்” எனப் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

”மேலும், ஒரு வருடம் நிறைய தருணங்கள் நிறைந்தது. நிறைய ஏற்றத் தாழ்வுகள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனை நேரங்கள். ஆனால் அபரிமிதமான அன்பும், பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வருவது மிகுந்த நம்பிக்கையை மீட்டெடுக்கிறது மற்றும் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க அனைத்து ஆற்றலையும் அளிக்கிறது” என்று உருகியுள்ளார்.

”அதுமட்டுமின்றி என் உயிர்கள் மற்றும் உலகங்களுடன் அனைத்தையும் ஒன்றாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பம் கொடுத்த பலம் எல்லாத்தையும் மாற்றுகிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்கப் பாடுபடுகிறார்கள் என்பதுதான் என்னைப் போன்றவர்களுக்குத் தேவையான அனைத்து உந்துதலும்” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Nayanthara Wedding Anniversary: விக்கி - நயன் திருமண நாள்: இணையத்தில் வைரலாகும் உயிர், உலக் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.