ETV Bharat / entertainment

ரூ.100 கோடி கேட்டு மனைவி மீது மானநஷ்ட வழக்கு போட்ட நவாசுதீன் சித்திக் - நடிகர் நவாசுதீன் சித்திக் மனைவி யார்

நடிகர் நவாசுதீன் சித்திக் அவரது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் சகோதரர் ஷம்சுதீன் சித்திக் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

Nawazuddin Siddiqui files Rs 100 cr defamation suit against ex-wife, brother

author img

By

Published : Mar 27, 2023, 3:46 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நீதிமன்றத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக், ரூ. 100 கோடி கேட்டு அவரது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் சகோதரர் ஷம்சுதீன் சித்திக் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 30 ஆம் தேதி நீதிபதி ரியாஸ் சாக்லா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கும் அவரது மனைவி ஆலியா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பிரிவுக்கு பின் ஆலியா துபாய்க்கு சென்று விட்டார். இந்த நிலையில் மும்பை திரும்பி நவாசுதீன் சித்திக் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதற்கு நவாசுதீன் சித்திக்கும் பதிலளித்து வந்த நிலையில், இருவரும் நீதிமன்றத்தையும் நாடினர்.

இதையும் படிங்க: வாரணாசியில் பிரபல நடிகை தற்கொலை.. படப்பிடிப்பில் விபரீதம்.. கடைசி வீடியோ வைரல்..

இந்த சட்டப் போராட்டத்தில் நவாசுதீன் சித்திக், திடீர் திருப்பமாக அவரது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் சகோதரர் ஷம்சுதீன் சித்திக் இருவர் மீதும் மும்பை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறான மற்றும் பொய்யான கருத்துகளை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டி ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார்.

அதோடு அவர்கள் இருவரும் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிரந்தமாக தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை நீதிபதி ரியாஸ் சாக்லா தலைமையிலான அமர்வு மார்ச் 30 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. இதுகுறித்து நடிகர் நவாசுதீன் சித்திக் தரப்பில் கூறியதாவது, 2008ஆம் ஆண்டில் நவாசுதீன் சித்திக் அவரது சகோதரர் ஷம்சுதீன் சித்திக்கை தனது மேலாளராக நியமித்தார். அவரது வரவு - செலவுகளை கவனித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கினார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ஷம்சுதீன் பல கோடி ரூபாய்களை கையாடல் செய்து அவரது பெயரில் சொத்துக்களை வாங்கினார். இதுகுறித்து அறிந்த நவாசுதீன் கேள்வி கேட்கையில், ஷம்சுதீன் ஆலியாவின் உதவியை நாடி, நவாசுதீன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கவும், வழக்கு தொடரவும் தூண்டியுள்ளார்.

இதனால் ஆலியாவும் நவாசுதீனுக்கு எதிராக திரும்பியுள்ளார். ஆகவே, இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை வழக்கு - அமலாக்கத்துறையை எதிர்த்து கேசிஆர் மகள் கவிதா மனு - இன்று விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.