ETV Bharat / entertainment

இப்போது சினிமாவில் நாயகிகளுக்கான இலக்கணம் மாறிவிட்டது - கரு.பழனியப்பன்!

கயல் ஆனந்தி, சாம் ஜோன்ஸ் நடித்து இயக்குநர் தாமரை செல்வன் இயக்கியுள்ள ‘நதி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இப்போது சினிமாவில் நாயகிகளுக்கான இலக்கணம் மாறிவிட்டது - கரு.பழனியப்பன்!
இப்போது சினிமாவில் நாயகிகளுக்கான இலக்கணம் மாறிவிட்டது - கரு.பழனியப்பன்!
author img

By

Published : Jul 15, 2022, 10:22 PM IST

இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி நடித்துள்ள 'நதி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இவ்விழாவில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, வடிவேல் முருகன், கரு.பழனியப்பன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகை கயல் ஆனந்தி, “இக்கதையை கேட்டதுமே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று உடனே தோன்றியது. இக்கதைக்கு தேவையானது போல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். அனைவரும் படம் பார்த்துவிட்டு சப்போர்ட் செய்யுங்கள். மேலும் நல்ல கதைகள் கிடைத்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்” என்றார்.

இப்போது சினிமாவில் நாயகிகளுக்கான இலக்கணம் மாறிவிட்டது - கரு.பழனியப்பன்!

மேலும் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “இங்கு உள்ள எல்லோரும் எனக்கு தாமரையை பிடிக்கும் என்றனர். எனக்கும் தாமரையை பிடிக்கும். நான் இயக்குநர் தாமரையை சொன்னேன். ஒரு நடிகன் எதிர்மரை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது திரையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

நல்லவனாக நடிப்பது சலிப்பைத்தரும். ஒரு உண்மைக் கதையை சிறப்பாக இயக்குநர் எடுத்துள்ளார். நான் சமீபத்தில் பார்த்த படங்களில் மிக சிறப்பான இடைவேளைக் காட்சி இப்படத்தில் உள்ளது. இப்போது சினிமா மிகப் பிரமாதமாக உள்ளது. ஆனந்தி நிறைய படங்களில் நடிக்க வேண்டும். தற்போது சினிமாவில் கதாநாயகிகளுக்கான இலக்கணமும் மாறிவிட்டது.

அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. நன்றாக நடித்தால் போதும். இப்படம் ஆனந்தியின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: 'பிரதாப் போத்தனை பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்தேன்..!' - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.