ETV Bharat / entertainment

இசையமைப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தீனா போட்டியிடுவதில் என்ன பிரச்சினை? இளையராஜா ஆடியோவால் பரபரப்பு! - tamil cinema news

இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தீனா குறித்து இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ளையராஜா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
ளையராஜா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 4:31 PM IST

சென்னை: தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா உள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தலைவராக உள்ள தீனா மீண்டும் மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இசை அமைப்பாளர் இளையராஜா பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில், "திரைத்துறையில் முதலில் தொடங்கப்பட்டது இசையமைப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்தை எம்.பி.சீனிவாசன் தொடங்கினார். இந்த சங்கத்தில் தலைவராக இரண்டு முறை இருக்கலாம் என்ற விதி உள்ளது.

நீ (தீனா) ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்துவிட்டாய். மூன்றாவது முறையும் ஏன் போட்டியிடுகிறாய் அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு தர வேண்டாமா?. இந்த சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால் இதை சொல்கிறேன். நீ இரண்டு முறை தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை செய்துள்ளாய் அந்த மனநிறைவோடு நீ தலைவர் பதவியை விட்டுத்தர வேண்டும்" என்று அந்த ஆடியோவில் இளையராஜா பேசியதாக பரவி வருகிறது.

இசையமைப்பாளர் தீனா குறித்து இளையராஜா பேசிய ஆடியோ திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தீனா, இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து பேசி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: வெளியானது 'சித்தா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.