மும்பை : கடந்த 2013 ஆம் ஆண்டு உயிரிழந்த நடிகை ஜியா கானின் மரண வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுவிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய பெற்றோருக்கு பிறந்தவர் ஜியா கான். தொடக்க கல்வியை அமெரிக்காவில் முடித்த ஜியா கான், மேல்நிலைக் கல்வியை லண்டன் சென்று கற்று தேர்ந்தார்.
பாலிவுட் சினிமா மீது உள்ள ஆசையில் நடிப்பு வாய்ப்பு தேடி மும்பை வந்த ஜியா கான், கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் நிஷாபத் படத்தி அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் சென்றடைந்த ஜியா கான், அந்த வருடத்தின் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தி மொழி கஜினி படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார். கஜினி படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து அவர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஹவுஸ்புல் திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை ஜுகு பகுதியில் உள்ள தன் வீட்டின், அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ஜியா கானின் திடீர் மரணம் பாலிவுட் சினிமாவில் பெரும் பேசு பொருளாக மாறியது. ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அந்த கண்ணோடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நெருக்கமான ஒருவரால் ஜியா கான் கொலை செய்யப்பட்டார் என்று அவரது தாயார் புகார் அளித்தார். தன் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் ஜியா கானின் காதலர் சுராஜ் பஞ்சோலியால் அவ கொலை செய்யப்பட்டா என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.
அதில் ஜியா கான் கொலை செய்யப்பட்டார் என்றும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான தனது புகாரை போலீசார் ஏற்க மறுத்து விட்டதாகவும் புகாரை விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஜியா கான் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி ஜியா கானின் வீட்டில் சோதனையிட்ட போலீசார் அவரது தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அதில் அவரிடம் நெருக்கமாக பழகி வந்த சூரத் பஞ்சோலியால், மன மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து சூரஜ் பன்சோலி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஜியா கானின் தாயார் ரபியா கான், தன் மகள் இறப்பை மூடி மறைக்க திட்டம் நடப்பதாகவும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் இறுதி கட்ட விவாதங்கள் அண்மையில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து இன்று (ஏப். 28) நடந்த இறுதி கட்ட விசாரணையில் சூரஜ் பஞ்சோலியை குற்றமற்றவர் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது, மேலும் இந்த வழக்கில் இருந்து சூரஜ் பஞ்சோலியை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க : புதிதாக 91 எப்.எம் டிரன்ஸ்மீட்டர்கள் பிரதமர் மோடி துவக்கி வைப்பு - ஒன்று கூட தமிழகத்தில் இல்லை!