சென்னை: மேதகு படத்தின் முதல் பாகத்தில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து மேதகு 2 ஆகஸ்ட் 28ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நடந்த தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையும், கருப்பு ஜூலை கலவரத்தையும், ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
அதேபோல 1981ஆம் ஆண்டு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவமும் இதில் இடம்பெற்றுள்ளது. கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பிரவின் குமார் இசையமைத்துள்ளார். வினோத் ராஜேந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
இதையும் படிங்க: ஆஹா தமிழுடன் ஜீவா முதல்முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி