சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கொடி கட்டிப்பறந்தவர், மன்சூர் அலிகான். பின்னர் காமெடி வேடங்களில் நடித்து சிரிக்க வைத்தார். மேலும் சில படங்களை இயக்கியும் நடித்துள்ளார்.
இவர் தற்போது தனது மகன் அலிகான் துக்ளக் கதாநாயகனாக நடிக்க தானே தயாரித்து, இயக்கியுள்ள படம் "கடமான்பாறை". வரும் வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட, முன்கூட்டியே தீர்மானித்து பத்து லட்சம் ரூபாய் செலவில் வெளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார், மன்சூர் அலிகான்.
எதிர்பார்த்தபடி போதிய திரையரங்குகள் கிடைக்காததால் "கடமான்பாறை" படம் வெளியாவதில் சிக்கல். மேலும் 'இவ்வளவு நாள் பொறுத்தும் பயனில்லயே' என மன்சூர் அலிகான் வேதனையில் உள்ளதாகவும், இன்று இரவுக்குள் கேட்ட திரையரங்கங்கள் கிடைக்காவிட்டால் OTTயில் கடமான்பாறை திரைப்படத்தை வெளியிட மன்சூர் அலிகான் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் மிரட்ட வரும் அவதார் படத்தின் முதல் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு