தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என அவரது பிஆர்ஓ தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா நெகடிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து மணிரத்னம் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்