ETV Bharat / entertainment

மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - Ann Mega Media

மிகப் பெரிய வரவேற்பை பெற்ற மாளிகப்புரம் திடைப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ் தேதி
மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ் தேதி
author img

By

Published : Feb 12, 2023, 7:09 AM IST

Updated : Feb 12, 2023, 7:32 AM IST

சென்னை: மலையாள சினிமாக்கள் மொழி கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது. பல படங்கள் பல்வேறு மொழிகளில் ஹிட் அடிக்கிறது. அப்படி மலையாள மொழியில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் மாளிகப்புரம். விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் தனுஷ் நடித்த சீடன் படத்தில் நடித்தவர்.

மாளிகப்புரம் படத்தில் ஐயப்ப பக்தராக சிறப்பாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களாக தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருத்தனர்.

கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் படமாக இது உருவாகியிருந்தது. இப்படத்தில் சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், TG.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதியுள்ளார். சந்தோஷ் வர்மா, B.K. ஹரிநாராயணன் பாடல்களை எழுத, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷமீர் முகம்மது படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். Ann Mega Media மற்றும் Kavya Film Company சார்பில் பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் தமிழ் டப்பிங் கடந்த மாதம் வெளியானது. இங்கும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற 15ஆம் தேதி ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் மாளிகப்புரம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெய்பீம் நடிகர் மணிகண்டனின் 'குட் நைட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Last Updated : Feb 12, 2023, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.