நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் நாளை உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று(மே 1) இப்படத்தின் ட்ரெய்லர் உலகின் உயரிய கட்டங்களில் ஒன்றான துபாயிலுள்ள புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது. பல மொழிகளில் ’பான்’ இந்தியத்திரைப்படமாக வெளியாகவிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் கட்சியான ’மக்கள் நீதி மய்யம்’ சார்பாக தொண்டர்களுக்கு ஓர் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “விக்ரம் பட கொண்டாட்டத்தை அரசியல் கொண்டாட்டமாக மாற்றி நம்மவரை அரசியலின் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே நாளை பட வெளியீட்டை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பெரும் கொண்டாட்ட ஏற்பாடுகள் தயார் நிலையிலுள்ளன. அதிகாலை 4 மணிக்கு இப்படத்தின் முதல் காட்சிகள் தொடங்குகின்றன. அதைத்தொடர்ந்து சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நாளை காலை 10 மணிக்காட்சிக்கு முன்பு, கமல்ஹாசனின் கட்-அவுட்டுக்கு ரூ.3லட்சம் மதிப்பிலான மாலை கிரேன் மூலம் போடப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.