ETV Bharat / entertainment

'மாயத்திரை' ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் பிரசாந்த்!

author img

By

Published : Aug 2, 2022, 3:49 PM IST

இயக்குநர் சம்பத்குமார் இயக்கியுள்ள ‘மாயத்திரை’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார்.

மாயத்திரை ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் பிரசாந்த்!

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய்பாபு தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குனர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய T.சம்பத்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்காம் பேராசிரியரான இவர் அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவர்
நடிகர் அசோக்குமார் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், முக்கிய வேடங்களில் ஜெய்பாலா, தருண் மாஸ்டர், காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன், சுஜாதா மாஸ்டர், மாஸ்டர் ஆரவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை இளையராஜா வேலுசாமியும், படத்தொகுப்பை M.சுரேஷ் ஆகியோரும் கவனித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி மற்றும் எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். பாடலாசிரியர் ஞானகரவேல் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லரை இன்று நடிகர் பிரசாந்த் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இதுபற்றி பிரசாந்த் கூறும்போது, “இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே ஹாரர் படங்களில் இது வித்தியாசமான முயற்சியாக இருப்பது தெரிகிறது. குறிப்பாக ஒரு நாவல் பாணியிலான முயற்சி இதில் இருக்கிறது” என பாராட்டினார்.

இதையும் படிங்க: “எதிலும் தனி பாணி - அதுதான் பார்த்திபன்” - இரவின் நிழல் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.