சென்னை: ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்துள்ள பான் இந்தியா படமான மைக்கேல் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், ஞானவேல் ராஜா, சி.வி.குமார், எஸ்.ஆர்.பிரபு, இசை அமைப்பாளர் சாம் சி.எஸ்., நடிகை ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ’மாநகரம் படத்தில் சந்தீப்பின் பெயர் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் சொன்னால்தான் நன்றாக இருக்கும்’ என்றார்.
மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ‘எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுபவர் சந்தீப் தான்’ என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ், ’எனக்கு இயக்குநர்கள் நல்ல சுதந்திரம் கொடுப்பார்கள். அதனால் தான் என்னால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. இப்படம் அம்மா சென்டிமென்ட் உள்ள படம். ஒரே நாளில் எனது இரண்டு படங்கள் வெளியாகின்றன. அடுத்த வாரமும் அப்படித்தான். இரண்டு படங்களும் இப்போதே லாபம் பார்த்துவிட்டன. மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
நடிகர் சந்தீப் கிஷன் பேசுகையில், ’லோகேஷ் கனகராஜை என்னுடைய நண்பர் தான் என்னிடம் அறிமுகப்படுத்தினார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை எனக்காக வழங்க ஒப்புக்கொண்டார். அவர் இளைய தலைமுறையினருக்கு இன்ஸ்பிரேஷன். நான் கௌதம் மேனனிடம் வாரணம் ஆயிரம் படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். தற்போது அவருடன் இணைந்து நடிக்கிறேன்’என்றார்.
லோகேஷ் கனகராஜ் இளைய தலைமுறையினருக்கு இன்ஸ்பிரேஷன் - நடிகர் சந்தீப் கிஷன்! - Pan India movie Michael
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இளைய தலைமுறையினருக்கு இன்ஸ்பிரேஷன் என்று நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.