நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று(ஜூலை 21) அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பின் தொடங்கப்பட்டு சமீபத்தில் நிறைவடைந்தது.
மேலும், இந்தப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், என அனைத்தும் சமீப காலத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தத் திரைப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுடன் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, ரோனித் ராய், விசு ரெட்டி ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ’பூரி கனெக்ட்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: 'இரவின் நிழல்' ஒரு உலக சாதனை படம் - ரஜினிகாந்த் பாராட்டு!