ETV Bharat / entertainment

இணையத்தில் லீக்கான 'தளபதி 66' சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! - விஜய்

நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 66' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் லீக்கான ’தளபதி 66’ சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

author img

By

Published : Jun 9, 2022, 6:33 PM IST

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'தளபதி 66' என்ற பெயர் சூடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், குஷ்பூ, ஷியாம், சங்கீதா, யோகி பாபு, பிரபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன. அது, நடிகர் விஜய், குஷ்பூ இணைந்து நடிக்கும் காட்சியின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாகத் தெரிகிறது. மேலும், படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இணையத்தில் லீக்கான ’தளபதி 66’ சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
இணையத்தில் லீக்கான ’தளபதி 66’ சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

குடும்பக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் உணர்ச்சி மிக்க பொழுதுபோக்கு கமர்சியல் படமாக 'தளபதி 66' உருவாகி வருகிறது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜயின் பிறந்த நாளான வருகிற ஜூன் 22ஆம் தேதி வெளியாகவிருப்பதாகத் திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ''விஜயை 'தளபதி அய்யா' எனக் கூறியது பாசத்தினால் மட்டுமே..!'' - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.