ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குலுகுலு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சந்தானம், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் நந்தகுமார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சந்தானம் பேசுகையில், இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி இப்படம் இருக்கும். ரத்னகுமார் இயக்குனராக கிடைத்தது எனது அதிர்ஷ்டம் தான். என்னைப்பற்றி உதயநிதி பேசியது அவருடைய பெருந்தன்மை. இவர் சினிமாவில் வசனம் பேச வரவில்லை. மக்களிடம் நேரடியாக பேச வந்துள்ளார் என்று புரிந்துகொண்டேன். ஒரு கல் ஒரு கண்ணாடியை விட ஒரு கல்லை வைத்து பயங்கரமான மேட்டர் பண்ணிவிட்டார். மக்களிடம் ஹீரோவாக வேண்டும் என்பதே அவருடைய எண்ணம் என கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், படம் பார்த்தேன் ரொம்ப பிடித்து இருந்தது. சந்தானம் எனக்கு போன் செய்து இப்படத்தை தமிழகத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீங்க சொன்னால் சரி என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் நான் இங்கு ஒரு தயாரிப்பாளர் மற்றும் நடிகராக நிற்கிறேன் என்றால் அதற்கு முழுகாரணம் சந்தானம் தான். மீண்டும் எனக்கு போன் செய்து ரெட் ஜெயண்ட் லோகோ போட வேண்டும் என்று கேட்டார்.
நான் பொதுவாக படம் பார்க்காமல் லோகோ போடுவதில்லை. இயக்குனர் யார் என்று கேட்டேன். ரத்னகுமார் என்றார். அப்படியா அவர் நல்ல படம்தான் எடுப்பார் சரி ஓகே என்று சொல்லிவிட்டேன். சந்தானம் சமீபத்தில் நடித்த படங்களில் இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இதுவரைக்கும் பார்க்காத சந்தானத்தை இப்படத்தில் பார்ப்பீர்கள். எமோஷனலாக நடித்துள்ளார். இந்த வருடத்தின் மிகப் பெரிய வெற்றி படமாக இருக்கும். ரெட் ஜெயண்ட் வெற்றிப்பட வரிசையில் இப்படமும் இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'தேசிய விருது நல்ல திரைப்படங்களில் நடிக்க ஊக்கமளிக்கிறது' - நடிகர் சூர்யா