ETV Bharat / entertainment

'கூச முனிசாமி வீரப்பன்' ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டு தேதி மாற்றம்! - ott

Koose Munisamy Veerappan Docuseries: சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி அறிந்த மற்றும் அறியப்படாத உண்மைகள் அடங்கிய ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர் நாளை ZEE5 -ல் திரையிடப்பட இருந்த சூழலில் தற்போது வெளியீட்டு தேதி இந்த மாதம் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 10:15 PM IST

சென்னை: ஜீ5 (ZEE5) ஓடிடி தளம் படங்களை வாங்கி ஓடிடியில் வெளியிடுவது மட்டுமின்றி, இணைய தொடர்களையும் (Web Series) எடுத்து வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான விலங்கு, அயலி, செங்களம், பிங்கர் பிரிண்ட், ஆட்டோ ஷங்கர் உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த வரிசையில் தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய ஆவணத் தொடரை வெளியிடுகிறது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது.

நிஜ வாழ்க்கைக் காட்சிகள், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணி ஆகியவை தெளிவாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில், ‘கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8ஆம் தேதி (நாளை) ZEE5 -ல் பிரத்தியேகமாகத் திரையிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சமீபத்திய சென்னை வெள்ளம் பரவலான மின்வெட்டுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக நகரின் உள்கட்டமைப்பு கணிசமாக பாதித்தது.

இதனால், பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு உகந்த வகையிலான பார்வை அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், வெளியீட்டுத் தேதி தள்ளி
வைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், ‘கூச முனிசாமி வீரப்பன்’ தற்போது டிசம்பர் 14ஆம் தேதி ZEE5 -ல் பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: எந்த மூவிக்கு போகலாம்ன்னு பிளான் போட்டுருக்கீங்க? இந்த வாரம் ரிலீஸ்ஸில் 5 படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.