ETV Bharat / entertainment

கோலிவுட்டில் இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள படங்களின் பட்டியல்! - துடிக்கும் கரங்கள்’

Tamil Cinema News: தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஜவான், தமிழ்க்குடிமகன், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி உள்ளிட்ட 11 படங்கள் வெளியாகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 3:29 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. அதே போல் இந்த வாரமும் ஏகப்பட்ட படங்கள் வெளியாக உள்ளது. இந்த வாரம் மொத்தம் இன்று 4 படங்களும் நாளை 7 படங்களும் வெளியாகிறது. இன்று ஜவான், தமிழ்க்குடிமகன், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி, தி நன்-2 ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

பெட்டிக்கடை, பகிரி படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி உள்ள தமிழ்க்குடிமகன் படமும் இன்று திரைக்கு வந்துள்ளது. தந்தையின் தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக இப்படம் உருவாகியுள்ளது. சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் சாதியற்றவன் என்பவை பற்றியும் இப்படம் பேசுகிறது.

மேலும் அனுஷ்காவின் 48வது படமான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படமும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். இது தவிர ஹாலிவுட்டில் அனைவரையும் அச்சுறுத்திய தி நன் படத்தின் 2ஆம் பாகமான தி நன் - 2 திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

நாளை ஏழு படங்கள் வெளியாகிறது. அருவி, அயலி உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ள அருவி மதன் முதல் முறையாக இயக்கியுள்ள படம் நூடுல்ஸ். சாதாரண மனிதனுக்கும் போலீஸுக்கும் நடக்கும் ஈகோ போட்டியே இப்படத்தின் கதையாகும்.

இதில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், அருவி மதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மோகன் தட்சு இயக்கியுள்ள அங்கரகன் படத்தில் சத்யராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லனாக நடித்துள்ளார். துடிக்கும் கரங்கள், வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ’துடிக்கும் கரங்கள்’. மேலும் ரெட் சாண்டல் வுட், பரிவர்த்தனை உள்ளிட்ட படங்களும் நாளை வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: எச்.வினோத் படத்திற்கு ரெடியாகும் உலக நாயகன்.. அனல் பறக்கும் துப்பாக்கி பயிற்சி வீடியோ வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.