ETV Bharat / entertainment

சினிமா சிதறல்கள்: யூடியூபை அதிரவைக்கும் ஜவான் சிங்கிள், விரைவில் தொடங்கும் சர்தார் 2! - kollywood updates

ஜவான் படத்தின் முதல் சிங்கிள், ஜப்பான் பட அப்டேட், சர்தார் 2 என பல சினிமா நிகழ்வுகளின் செய்திகளை இந்த சினிமா சிதறல்கள் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 1, 2023, 7:33 PM IST

சென்னை: ஜவான் பாடல் சாதனை

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான்படத்தின் முதல் சிங்கிள், ஹிந்தியில் 'ஜிந்தா பந்தா', தமிழில் 'வந்த எடம்' மற்றும் தெலுங்கில் 'தும்மே துலிபேலா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், யூடியூபில் 46 மில்லியன் பார்வைகளை குவித்து, 2023-ல் மேடையில் மிகப்பெரிய சாதனைப் பாடலாக மாறியுள்ளது.

இந்த சாதனையின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், முதன்முறையாக, ஒரு திரைப்படத்தின் மூன்று மொழி வீடியோவும் 24 மணிநேரத்திற்குள் YouTubeஇன் உலகளாவிய தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. இது சமீபத்திய காலங்களில் எந்தவொரு பாடலும் செய்யாத சாதனையாகும்.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜிவி.பிரகாஷ் இசையில் பாடிய ஷான் ரோல்டன்

japan movie update
japan movie update

ஜிவி பிரகாஷ் குமார் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மற்றும் இசை அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இவரது நடிப்பில் ஏராளமான படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது, ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜப்பான் படத்தில் ஒரு குத்து மெலடி பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார் என்று அறிவித்துள்ளார். மேலும் தனது சினிமா வாழ்க்கையில் சிறந்த மெலடி பாடலாக அமையும் என ஷான் ரோல்டனுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

சர்தார் 2ஆம் பாகத்திற்கான பணிகள் தொடக்கம்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது. படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்தி நடிக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

93 வயதில் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் சாருஹாசன்: கோயம்புத்தூர் எஸ்.பி. மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார்.

93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் நாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன், விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் முகநூல் பதிவு: நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ''இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல…

"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",
பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்… இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட

வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் முகநூல் பதிவு

கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: எழுந்து வா இமயமே... பாரதிராஜாவுக்கு வைரமுத்து கவிதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.