ஹைதராபாத்: பேன் இந்தியா மூவியான கேஜிஎஃப் (KGF) எதிர்பார்த்ததை போலவே மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் படம் ஏப்.14ஆம் தேதி நாடு முழுக்க தியேட்டர்களில் வெளியானது.
இந்தப் படம் தங்கல், பாகுபலி2 மற்றும் ஆர்ஆர்ஆர் வரிசையில் ஆயிரம் கோடி வசூலித்த படம் என்ற கிளப்பில் இணைந்துள்ளது. இந்த நிலையில், கேஜிஎஃப் இரண்டாம் பாகம் இந்தியில் மூன்றாவது வாரமாக தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. இதற்கிடையில், இந்தியில் தற்போது டைகர் ஷெராப்பின் ஹீரோபன்டி2 மற்றும் அஜய் தேவ்கனின் ரன்வே34 உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.
-
#KGF2 remains the first choice of moviegoers, despite two new titles taking away a chunk of screens, shows and footfalls... Should cross #Dangal during #Eid holidays... [Week 3] Fri 4.25 cr, Sat 7.25 cr, Sun 9.27 cr. Total: ₹ 369.58 cr. #India biz. #Hindi pic.twitter.com/UkOLMVexSU
— taran adarsh (@taran_adarsh) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#KGF2 remains the first choice of moviegoers, despite two new titles taking away a chunk of screens, shows and footfalls... Should cross #Dangal during #Eid holidays... [Week 3] Fri 4.25 cr, Sat 7.25 cr, Sun 9.27 cr. Total: ₹ 369.58 cr. #India biz. #Hindi pic.twitter.com/UkOLMVexSU
— taran adarsh (@taran_adarsh) May 2, 2022#KGF2 remains the first choice of moviegoers, despite two new titles taking away a chunk of screens, shows and footfalls... Should cross #Dangal during #Eid holidays... [Week 3] Fri 4.25 cr, Sat 7.25 cr, Sun 9.27 cr. Total: ₹ 369.58 cr. #India biz. #Hindi pic.twitter.com/UkOLMVexSU
— taran adarsh (@taran_adarsh) May 2, 2022
எனினும் இந்தப் படங்களை காண ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் செலுத்தவில்லை. திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் கேஜிஎஃப்2 தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. நீல் சோப்ரா இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப்2 கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.
இந்தப் படம் மூன்றாவது வாரத்திலும் வெள்ளிக்கிழமை (4.25), சனிக்கிழமை (7.25), ஞாயிற்றுக்கிழமை (9.27) வசூலித்துள்ளது. கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் கேஜிஎஃப் தங்க சுரங்கம் குறித்து பேசுகின்றன. இந்தப் படத்தில் துணை நடிகர்களாக பிரகாஷ் ராஜ், மாலவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேஜிஎஃப் இரண்டாம் பாகம் இதுவரை ரூ.369.58 கோடி வசூலித்துள்ளதாக பிரபல சினிமா விமர்சனம் மற்றும் வணிக ஆலோசகர் தாரன் ஆதர்ஷ் ட்விட்டரில் கூறியுள்ளார். அண்மையில் அஜய் தேவ்கன் இந்தி தேசிய மொழி என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஆயிரம் கோடி வசூலித்த கேஜிஎஃப்-2