குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களின் மூலம் சிறந்த இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர், ராஜூ முருகன். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
ஜப்பான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இதில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் கார்த்தி அடுத்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது கார்த்தியின் 25ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சினிமா துறைக்கு அரசு உதவிகள் செய்யவில்லை - ஆர்கே செல்வமணி